பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 9, 2025-இல் நடைபெறும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 09.08.2025 (சனிக்கிழமை) காலை   11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறும் என்பதைத்  தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து  கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள

மருத்துவர் அன்புமணி இராமதாஸ்,

தலைவர்,

பாட்டாளி மக்கள் கட்சி

ச. வடிவேல் இராவணன்,

பொதுச் செயலாளர்,

பாட்டாளி மக்கள் கட்சி