பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக பணியாற்றி மறைந்த இசக்கி படையாட்சியாரின் முதலாம் ஆண்டு நினைவு இன்று (26.10.2024) சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.
அதையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் இசக்கி படையாட்சியாரின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்து கொண்டு இசக்கி படையாட்சியாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொருளாளர் திலகபாமா, தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் ச.சிவப்பிரகாசம், பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் மாநிலச் செயலாளர் முகுந்தன் பரசுராமன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் மாநில, மாவட்ட, உள்ளூர் நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.