2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாக் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுகள் நடைபெற்றன. அதில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதற்கான தொகுதிப் பங்கீட்டு உடன்பாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், பாரதிய ஜனதா சார்பில் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களும் இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.