கதிர்வேல் நாயக்கர்ம றைவுக்கு மருத்துவர் அய்யா இரங்கல்

சென்னையை அடுத்த பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட துணைத்தலைவர் கதிர்வேல் நாயக்கர் உடல்நலக் குறைவு காரணமாக  இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும்  அடைந்தேன்.

கதிர்வேல் நாயக்கரை 45 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அறிவேன். வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போதே அதில் தம்மை இணைத்துக் கொண்டு அதன் வளர்ச்சிக்காக உழைத்தவர். பல்லாவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புளியமரத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிகளை ஏற்றி பரபரப்பை ஏற்படுத்தியவர். என் மீது மிகுந்த அன்பும், பற்றும் கொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.