விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க  வேட்பாளராக சி.அன்புமணி போட்டி.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவிப்பு:-

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக  வன்னியர் சங்க  மாநிலத்  துணைத் தலைவர் சி. அன்புமணி அவர்கள் போட்டியிடுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.