உயிர்களைக் காக்க உருவெடுத்த உன்னத தேவதைகளின் குறைகள் களையப்பட வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் செவிலியர் நாள் வாழ்த்து.

என் கடன் மனித உயிர்களைக் காப்பதே என்று உறுதியேற்று இரவு பகல் பாராமல் நோயர்களுக்கு சேவை செய்யும் உன்னத தேவதைகளான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் நாளில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் ஈடு இணையற்ற சேவை என்றால் அது செவிலியர் பணி தான். ஆனால், அதற்கேற்ற ஊதியமும், அங்கீகாரமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்தக் குறையை போக்கும் நோக்குடன் தான் நடப்பாண்டுக்கான உலக செவிலியர் நாளை ’’ நமது செவிலியர்கள், நமது எதிர்காலம், கவனிப்பின் பொருளாதார சக்தி (Our Nurses. Our Future. The economic power of care)” என்ற தலைப்பில் கொண்டாட உலக செவிலியர்கள் கவுன்சில் தீர்மானித்துள்ளது. அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தான் இதன் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செவிலியர்கள் அனுபவித்து வரும் குறைகளைக் களைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்!