பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.
மருத்துவர் அய்யாவின் மனதில் நிறைந்தவரும், மறைந்த வன்னியர் சங்கத் தலைவருமான மாவீரன் ஜெ.குரு நம்மை பிரிந்து சென்று ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. அவரது மறைவும், பிரிவும் ஒவ்வொரு நாளும் நம்மை வாட்டுகின்றன. மருத்துவர் அய்யா அவர்களின் மனதையும், குறிப்பையும் அறிந்து களப்பணியாற்றியவர். பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்பதையே தமது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர் மாவீரன். அது தான் அவரது கனவு. மாவீரனின் அந்தக் கனவை நனவாக்க கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம்.