தாயாகி கவனிக்கும் செவிலியர்களின் உழைப்பும், தியாகமும் போற்றப்பட வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் செவிலியர் நாள் வாழ்த்து.

போர்க்களத்தில் காயமடைந்து  உயிருக்கு போராடிய  வீரர்களுக்கு  கைவிளக்கேந்திச் சென்று மருத்துவம் அளித்த கைவிளக்கேந்திய காரிகை  ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான இன்று உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மனித தேவதைகளாக மாறி மருத்துவப் பணி செய்யும் செவிலியர்கள்  அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் தாய்க்கு இணை யாருமில்லை. அத்தகைய தாய் பட்டத்தைப் பெற்றவர்கள் செவிலித்தாய்கள் தான்.  எந்த வித வெறுப்பும், சலிப்பும் இல்லாமல் மனிதர்களுக்கு சேவை செய்யும் உன்னத பிறவிகள் அவர்கள். அவர்களின் உழைப்பும், தியாகமும் போற்றப்பட வேண்டும்.  அவர்களை இந்த நாளில் வணங்குவோம்; நன்றி செலுத்துவோம்.