இன்று, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி சமூகவியல் துறையும், பசுமைத் தாயகமும் இணைந்து நடத்திய, காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் பாலின சமத்துவம் (CLIMATE JUSTICE & GENDER EQUALITY) கருத்தரங்கில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பங்கேற்று பேசினார்கள்.
இக்கருத்தரங்கில் பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி, தமிழக அரசின் சுற்றுச்சூழல் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, நீரியல் வல்லுனர் முனைவர் ஜனகராஜன், மருத்துவர் தெ. வேலாயுதம், ஓசை காளிதாஸ் மற்றும் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.