பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கருத்து.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவு சரியானதே என்றும், ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஸ்டெர்லைட் ஆலை அங்குள்ள மக்களுக்கும், இயற்கைக்கும் பெரும் கேட்டை ஏற்படுத்தி வருவதால் அதை மூட வேண்டும் என பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வந்தது. ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கு ஜனவரி மாதம் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், அவ்வழக்கை நடத்த மூத்த வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க வேண்டும்; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கடந்த ஜனவரி 4-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தி இருந்தேன். அதைப் போலவே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.