அன்னையர்களே அனைத்துக்கும் ஆதாரம்… அவர்களை நாம் எந்நாளும் வணங்குவோம் !

பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அன்னையர் நாள் வாழ்த்து.

உலகின் ஈடு இணையற்ற உறவு,

ஒப்பீடற்ற  தியாகத்தின் திருவுருவம்,

மனிதர்களுக்கு மாதா, பிதா, குருவாக

இருந்து  வளர்த்தெடுக்கும்  தெய்வம்,

தந்தை தொடங்கி, கணவன்,  மகன் என

பலரின் வெற்றிக்கு பின்னிருக்கும் சக்தி

மனிதவாழ்வின் அனைத்துக்கும் ஆதாரமாக திகழ்பவர்கள் அன்னையர்களே.  நீங்கள் இன்றி நாங்கள் இல்லை என்ற  உண்மை அவர்களுக்கு மட்டுமே  பொருந்தும்.  நம் ஒவ்வொருவரையும் தீராக்கடனாளியாக்கிய  அன்னையரை உலக அன்னையர் நாளில் வணங்குவோம்; அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.