பத்திரிகையாளர் அழைப்பு – சென்னையில் நாளை பா.ம.க.வின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வெளியிடுகிறார்!

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2024-25 ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை (22-ஆம் நிழல் நிதிநிலை அறிக்கை) சென்னையில் நாளை (14.02.2024) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி  விடுதியில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடவுள்ளார்.

இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிப்பதற்காக தங்களின் ஊடகத்திலிருந்து செய்தியாளரையும்,  ஒளிப்பதிவாளர்/ புகைப்படக் கலைஞரையும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

வழக்கறிஞர் க.பாலு,
செய்தித்தொடர்பாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி