SMART 4 BHARAT SUMMIT – 2026 தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய முனைவர் சௌமியா அன்புமணி

புதுதில்லியில் நடைபெற்ற “SMART 4 BHARAT SUMMIT – 2026” தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், அரசியல், அதிகாரம், தலைமைத்துவம் மற்றும் டிஜிட்டல் ஊடகத் தளங்களில் பெண்களின் பங்களிப்பு, ஆளுமை மற்றும் முக்கியத்துவம் குறித்து நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் உரையாற்றினார்.

சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பையும் தலைமைத்துவத்தையும் முன்னிறுத்தும் வகையில் அமைந்த இம்மாநாட்டில் அவர் பங்கேற்று உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

பெண்களின் பங்களிப்பு வலுப்பெறட்டும்! தலைமைத்துவத்தில் அவர்களின் பங்கு உயரட்டும்!