பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்.
செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேட்டில் பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக அரசு சார்பில் ஆலமரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். வெட்டி சாய்க்கப்பட்ட அந்த ஆலமரத்தை பசுமைத்தாயகம் சார்பாக மீட்டெடுத்து ஆழமான குழிதோண்டி, மறுநடவு செய்து, மரத்தை வெட்டுவதற்கு பதில் இதுபோன்று மறு நடவு செய்ய வேண்டும் என்று பசுமைத்தாயகம் சார்பில் போராட்டங்கள் நடத்தி, அரசிடம் கோரிக்கை வைத்தோம்.
அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த வெண்பேட்டில், தனியார் மனைப்பிரிவில் சாலைக்கு நடுவே இருந்த ஆலமரத்தை மறு நடவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் பசுமைத்தாகம் சார்பில் அந்த ஆல மரம் மறுநடவு செய்யப்பட்டது. இன்று ஆலமரம் நன்றாக வளர்ந்து மறுபிறவி எடுத்த நிலையில் பசுமைத் தாயகம் சார்பில் பார்வையிட்டு அந்த மரத்திற்கு மலர் தூவி, நீரூற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினோம்.
இதைப்போல், அரசு சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை அடியோடு வெட்டி சாய்ப்பதை தவிர்த்து ஆங்காங்கே உள்ள நீர்ப்பிடிப்பு பகுதி, குளங்கள், பூங்காக்கள், பள்ளி, இடுகாடுகள் போன்ற இடத்தில் அம்மரங்களை அப்படியே மறு நடவு செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து, பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டு வருகிறோம்.